இந்தியாவிலேயே நகரமயமாதல் மிக அதிகமாக நடப்பது தமிழகத்தில் தான்! விவசாய நிலங்களெல்லாம் வேக,வேகமாக விழுங்கப்பட்டு புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே உள்ளன! இதன் உள்ளார்ந்த நோக்கம் வளர்ச்சியா..? இதன் பின்னணி என்ன..? விளைவுகள் என்ன..? ”எங்க ஊரும் மாநகராட்சி ஆகிவிட்டது” என்பது மக்களில் சிலருக்கு மகிழ்வைத் தரலாம்! ஆகா, இனி பெரிய சாலை வசதிகள் செய்து தரப்படும், போக்குவரத்து வசதிகள் மேம்படும்! பெரிய,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள் தோன்றும், தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் அதிகமாகும்..! என்றெல்லாம் யோசிக்க தோன்றும். இது மட்டுமல்ல, ...