சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்? உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ...

பதவிச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக் குழுவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்த பன்னீர் அணி, கடைசி பிரம்மாஸ்த்திரமாக பொதுக் குழுவை தடுக்க கோரி காவல்துறையை நாடியுள்ளது! அதாவது, திமுக அரசின் தயவில், அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது! ”அதிமுக பொதுக் குழு நடந்தால் அதில் கலவரம் வெடிக்கும்” என பன்னீர் புகார் தருகிறார் என்றால், என்ன பொருள்? பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தன் ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று ...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…! சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு ...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்ததாக சென்ற ஆண்டு தம்பட்டம் அடித்தது ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம்! இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி குறைந்ததால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தன்னை திட்டமிடல் இல்லாத ஓர் அரசாகத் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகிறது.  கொரோனா தடுப்பூசிகளிலும் கூட உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து ...

விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின்  Transfer of Power in India  – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன்  விடுதலை இந்தியாவில் அதிக  வெளிச்சம்படாத மனிதர். ’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி ...