ஏ.செந்தில், மதுரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல்வாதிகள் புதிய கட்சிகள் தொடங்கத் தான் இந்த ஜனநாயகம் பயன்படுகிறதே தவிர, சாமானிய மக்களுக்கு என்ன பயன்? சாமானிய மக்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிக் கொண்டுள்ளது நம் ஜனநாயகம். பணமில்லாமல் தேர்தல் களத்திற்கு வராதே என்று இன்று மக்கள் அரசியல்வாதிகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்…! முகைதீன் புதல்வன், இராமேஷ்வரம், இராமநாதபுரம் கேள்வி கேட்பவர்கள் அறிவாளிகளா? பதில் சொல்பவர்கள் அறிவாளிகளா? முட்டாள்தனமான கேள்விகளை எதிர்கொள்ளத் தெரிந்த அறிவாளிகளும் உண்டு. அறிவாளிகளைக் கூட முட்டாள்கள் ஆக்கிவிடும் கேள்வியாளர்களும் உண்டு. ...