இன்றைக்கு காலத்தின் தேவையாகிறார் காந்தி காந்தி அமைதி அறக்கட்டளை டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்வில் வழக்கறிஞரும்,சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் காந்தி எப்படி இன்றைய காலத்தின் தேவையாகிறார் என்பதை ஆழமாகவும்,அழகாகவும் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசாங்கமே மக்களைச் சுரண்டும் போது, மக்கள் பாரபட்சமாக நடத்தப்படும் போது,சட்டங்களை அரசே வளைக்க முற்படும் தருணங்களில் எப்படி மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என காந்தியின் கோணத்தில் பேசினார்! அதன் தமிழாக்கத்தை காந்தியவாதியும்,மருத்துவருமான ஜீவா தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஆற்றிய செயல்பாடுகளும்,உரைகளும் சமூக தளத்திலும், ...