குழந்தை பேறு காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அந்த காலகட்டத்தில் பக்குவமாக சாப்பிட வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொண்டால் சிக்கல்கள் தீரும்! சுகமான குழந்தைப் பேறு கைகூடும்! பருவமடைதலில் தொடங்கி திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, பிரசவம், மெனோபாஸ் என பெண்களின் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் வலிகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆக, பெண்கள் ஒவ்வொரு பருவத்திலும் படும்பாடுகளை சொல்லிமாளாது. இதில் ஒரு சிலர் விதிவிலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலியில் தொடங்கி முதுகுவலி ...