டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா? உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் ...
ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..? தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல ...