சிறைச்சாலையின் வித்தியாசமான அனுபவங்களைச் சொல்லும் நூலே, ‘கூண்டின் நிறங்கள் – சிறையின் நினைவுகள்’! மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரான அருண்பெரைரா சிறைச்சாலையின் கொடூரங்களை அறிந்து கொள்ளவும், அதை வெளிப்படுத்தவுமான வாய்ப்பாகவும் சிறைவாழ்வை பயன்படுத்திக் கொண்டதே இந்த நூல்! விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்ட விதார்பாவில் சமூகப் பணிபுரிந்த அருண்பெரைராவை நக்சல் என கைது செய்து, வழக்கு, வழக்கு, மேலும் வழக்கு என பதினோரு வழக்குகளில் கைது செய்ததையும் பிணையில் வர முடியாமல் தடுத்து தொடர்ந்து சிறைப்படுத்தியதையும் சொல்கிறது இந்த நூல்! நாக்பூரில் ...

சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள்,  இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...