வீரப்பனின் அண்ணன்,  மாதையன் 33 வருடங்களாக சிறையிலேயே இருந்து 74 வயதில் சமீபத்தில் இறந்து போனார்.இது போல முதுமையையும் நோய்களையும் சுமந்து கொண்டு மரணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடிவதில்லை? சிறைச் சாலைகளில் ஏன் மனித உரிமைகளுக்கு மரியாதை இல்லை? ”மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது”, என்று இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  வந்த போது, மாதையன் தன்னிடம் சொன்னதாக, நீண்டகால சிறைவாசியாக இருந்த ...

கைதிகளை சித்திரவதை செய்வதில், இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த  மாநிலமாக  தமிழ்நாடு உள்ளது ! இப்போதுள்ள சிறைகள், அடிமை ஆட்சி கால சிறைகளை விட மோசமாக உள்ளன. எமர்ஜென்சி சிறைக்கொடுமைகளை ஆராய்ந்த ‘இஸ்மாயில் ஆணையத்தின்’ பரிந்துரைகள் இன்னும்  அமலாக்கப்படவில்லை..! ‘சிறைகளில் தொடரும் சித்திரவதைகள்’ என்ற பொருளில்,  வாழ்நாள் சிறைவாசியாக இருந்த தியாகு, சமீபத்தில் நடைபெற்ற  கருத்தரங்கில் பேசினார். “மன்னன் காலத்தில் யானைக்காலால் இடற வைத்து மரண தண்டனை அளிக்கப்பட்டது; தேர்க்காலில் ஏற்றியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாற்றாகத்தான்   இப்போதைய சிறைகள் இருக்கின்றன. சமூக ...

தமிழ் நாட்டில் 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சிறையில் காலவரையின்றி வாடி வருகின்றனர்! இவர்கள் அனைவரும் 50 வயது முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள்! நீண்ட நெடும் காலமாக சமூகத்தையும், குடும்பத்தையும் பிரிந்து, உடல் குன்றி, உள்ளம் நொந்து சிறையில் உள்ளனர். கொரனா நெருக்கடி சிறைவாசிகளையும் பாதித்துள்ள இந்த தருணத்தில் அங்கு அதிக காலம் சிறையில் கழித்தவர்களை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழக பொதுச் செயலாளர் இரா.முத்தரசனும், திராவிடர் கழக தலைவர் ...

சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள்,  இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...