அரசு பள்ளிகள் மீது இந்தக் கல்விக் கொள்ளையர்களுக்கு என்ன தீடீர் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது…! இதற்கான உள் நோக்கங்கள் என்ன..? அந்தப் படுபாதக நோக்கங்களுக்கு அரசாங்கம் துணை போவதா? அரசுப் பள்ளிக் கட்டமைப்புகளை தனியார்கள் படிப்படியாக ஆக்கிரமிக்க அரசே திட்டம் போடுவதா..? தனியார் பள்ளிகளுக்கான பல சங்கங்கள் ஒன்று சேர்ந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளின் சங்கத் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உள்பட கல்வித் துறையில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த தனியார் பள்ளிகள் ...