சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான பாலியல் சீண்டல் பிரச்சனைகள் இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும் பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும் சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...
கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..! திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற வருவாய் ...
மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன! நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன! ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது ...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்தச் சட்டத்தால் இனி மின்சார கட்டணங்கள் தாறுமாறாக உயரவுள்ளன! ’’அப்படி உயர்த்தும் போது மானியம் தருவோம் கவலப்படாதீர்கள்’ ’என்கிறது அரசு! இப்படித்தான் சமையல் எரிவாயு விலை உயர்த்தபட்ட போது அதற்கான மானியத்தை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்று சொல்லப்பட்டது. பிறகு அப்படி செலுத்தி வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் ரூ.25 மட்டுமே! ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாம் தரும் பணம் ரூ.610. இதே நிலை நாளை மின்கட்டண விவகாரத்திலும் ...