ஒன்னுமே புரியல, இந்த ஆக்சிஜன் அரசியலில்! என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது…! இத்தனை பெரிய இந்தியாவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர யாருமில்லை என அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர். வாழ்க ஜனநாயகம்! ”அவர்கள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் செய்ய வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே செய்ய வேண்டும்’’ என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த அனுமதி தரலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தான் அனைவருக்கும் ...