பெருந்தொற்று காலகட்டத்தை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்ற போக்குகளுக்கு உலகம் எங்கும் எதிர்ப்புகள் வெடித்துள்ளன! ”அறிவியலின் பெயரால் அறிவுக்கு பொருந்தாத மூர்க்கத்தனத்தை திணிக்காதீர்கள்’’ என்று இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மக்களின் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது மருத்துவ துறையிலேயே தடுப்பூசிக்கு எதிரான முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன! மேலை நாடுகளில் முதல் எதிர்ப்பு மாஸ்க்கிற்கு தான்! கூட்டமான இடங்களில் செல்லும் போதும், அடுத்தவர்களிடம் பேசும் போதும் மாஸ்க் அணியுங்கள் என்றால் ஏற்கலாம்! ஆனால், ஒருவர் தனிப்பட்ட முறையில் வெளியில் நடைபயிற்சியில் இருக்கும் ...