கடந்த ஆட்சியாளர்கள் எதில் தான் முறைகேடு செய்யவில்லை..? எதையும் விட்டு வைக்கவில்லை. மக்கள் நலன் காக்க ஆட்சிபீடம் தரப்பட்டது. ஆனால், சதா சர்வ காலமும் சுருட்டுவதே தொழிலாக ஆட்சி நடத்தியுள்ளனர் அதிமுகவினர் என்பது தெரிய வருகிறது. நூறாண்டுகளுக்கு மேலாக எல்லாம் இன்னும் ஸ்டிராங்காக இருக்கும்படி கட்டிடங்கள் எழுப்பபட்டு கண் எதிரே சாட்சியமாக இருக்கின்றன! நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரன் கூட, இவ்வளவு அநீதியாக தான் போட்ட திட்டங்களிலேயே சுரண்டியதில்லை. ஒரு குடும்பம் குடியிருக்க வெறும் 280 சதுர அடிபோதும் என்று நினைத்த ஆட்சியாளர்களின் ...