தமிழகத்தில் ஒரு காலத்தில் அறிவு கோயிலாகத் திகழ்ந்த நூலகத்துறை தற்போது சீரழிந்து கொண்டிருக்கின்றது. மக்களுக்கும்,மாணவர்களுக்கும் அறிவு ஊற்றுக்கண்ணாக இருந்த நூலகத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும்,அறிவுத் தேடலும் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் நூலகத்துறையோ முடக்கத்திலும், முறைகேட்டிலும் மூச்சுத் திணறி தவிக்கிறது. தமிழகத்தில் புத்தக பதிப்பகங்கள்,வெளியீட்டு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நூலகத் துறையின் ஆர்டர்கள் குறைந்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்துறை கண்டு கொள்ளப்படாமல் போனது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பதிப்பகத்தார். விற்பனையாளர்களிடமிருந்து ...