கொரானா பேரழிவை எதிர் கொள்வதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை நிராகரிப்பது, மருந்து தயாரிப்பு, தடுப்பூசி தயாரிப்பு, வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடத் தயாராக உள்ள தகுதியான பொதுத்துறை நிறுவனங்களின் கைகளை முடக்கிப் போடுவது..என்றால், பிரதமரின் நோக்கம் தான் என்ன..? என கேட்கிறார், தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீ குமார். அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான சி.ஸ்ரீ குமார். எப்படி கொரோனாவை  எதிர்கொள்ளும் வல்லமை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உண்டு என்று இந்த நேர்காணலில் விலாவாரியாக சொல்லுகிறார்; இந்தப் ...

கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது. கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 ...

பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது ...