தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே மே 7 ஆம் தேதி புதுவை முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரங்கசாமி! ஆனால், துணை முதல்வர் உட்பட நான்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அழுத்தம் தந்தததால் அமைதியாக இருந்த ரங்கசாமி 9 ந் தேதி கொரானாவை காரணமாக்கி, சென்னை வந்து பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு புதுச்சேரி திரும்பிவிட்டார்! அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மாநில எல்லையில் ஆரவாரமான வரவேற்பு தந்துள்ளனர்! அதை பெற்றுக் கொண்டு நேராக அப்பாசாமி பைத்தியம் கோயிலுக்கு போய் வணங்கியவர் ...

சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம்,கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர்களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! ...