புலமைப்பித்தன் திராவிட இயக்கத்தின் தீப்பிழம்பாய், தென்றலாய் வெளிப்பட்டவர்! ஆழ்ந்த தமிழ் புலமையோடும், ஆர்ப்பாட்டமற்ற எளிமையோடும் வலம் வந்தவர். சற்றே நெகிழ்ந்து கொடுத்திருந்தால் இன்னும் ஆயிரம் பாடல்கள் எழுத வாய்ப்பு பெற்று இருப்பார்! ஆனால்,சென்டிமெண்ட் நிறைந்த சினிமா உலகில் பகுத்தறிவு சிங்கமாக இயங்கியது எப்படி..? மிக ஆழமான தமிழ்புலமையில் புலமைப்பித்தனை மிஞ்ச திரைக் கவிஞர்களில் யாருமில்லை எனலாம்! சங்கத் தமிழ் சந்தத் தமிழாக அவரிடம் வெளிப்பட்டது. திரைபாடல்களில் இலக்கிய நயத்தை பொழிந்தவர்! டப்பாங்குத்துப் பாடல்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வரிகளோ இவர் திரைத் தமிழில் ...