இரா.முருகவேள் எழுதியுள்ள வரலாற்று நாவல் ‘புனைபாவை’. கொங்கு மண்டலத்தின் 13 ம் நூற்றாண்டு காலக்  கதையை; கடைசி தமிழ் மன்னன், தமிழ்நாட்டை ஆண்ட போது வாழ்ந்த  மக்களின் வாழ்வியலை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பேசுகிறது. புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற நாவல் இது. விடுதலைக்குப் பிறகான,  கொங்கு மண்டலத்தின் அறுபது ஆண்டு கால வாழ்வியலை  ‘முகிலினி’ நாவலில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் இரா.முருகவேள். அவர் அதே கொங்கு மண்டலத்தின் மூலம்,  தமிழக வரலாற்றை புனைவதில் வியப்பில்லை. இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், கொங்கு மண்டலத்தில் ...