ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு. இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட ...