தில்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் மற்ற மாநிலங்களைவிடவும் பஞ்சாப் விவசாயிகள் வீறுகொண்டு போராடி வருகின்றனர்! பொதுவாக பஞ்சாபியர்கள் வீரம் செறிந்தவர்கள் என்றாலும், இதில் ஒரு விஷேச காரணம் உள்ளது.கடந்த காலங்களில் நாட்டில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் படுபாதகமான விளைவுகளை சந்தித்த பிரதேசம் பஞ்சாப் தான்! அதிலிருந்து விவசாயிகளை மீட்டு குறைந்தபட்சமேனும் பாதுகாப்பு தருவதற்காக முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களை தான் தற்போதைய அரசு உருக்குலைய செய்துள்ளது என்பது மட்டுமல்ல… கட்டியுள்ள கடைசி கோவணத்தையும் உருவப்பார்க்கிறது… இந்திய தலைநகரம் தன் சொந்த மண்ணின் ...