இந்தியா ஒரு நெருக்கடியான சமூக, அரசியல் சூழலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் அதை காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட காங்கிரஸ் கட்சியோ..,தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் கரைந்து கொண்டிருக்கிறது! மக்களாட்சித் தத்துவத்தை கேலிக்குரியதாக்கி, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டுள்ளது பாஜக! ஜாதி,மத பாகுபாடுகளை வளர்த்து நிறுவி, மக்கள் சமூகத்தை ஆண்டான்-அடிமை, மேலோர்-கீழோர் என பிரித்து அடக்கியாள நினைக்கும் பாஜகவிடமிருந்து இனி மக்களை காப்பாற்றப் போவது யார்..? 135 ஆண்டுகால பாரம்பரியமுள்ள அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற – எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இருந்த ...