இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  நியமனத்திற்கு இத்தனை தடைகளா? ஏற்கனவே 19 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கவர்னரின்  அடாவடித்தனங்களை கள்ள மெளனத்துடன் சகித்துக் கொள்ளுமா தமிழக அரசு? மிக முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழக அரசை தவிப்பிலும், அயர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்! இந்த மருத்துவ பல்கலை கழகத்துக்கு 10வது துணைவேந்தராக ...

எந்த காலகட்டத்திலும் நடந்திராத வகையில் ஒரு கவர்னர் நியமனம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழக கவர்னராக ரவீந்திர நாராயண ரவி (ஆர்.என்.ரவி) நியமிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இ.பி.எஸ், ஒ.பி.எஸ், மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் தொடையைத் தட்டிக் கொண்டு, கும்பிடு போட்டு வரவுள்ள கவர்னரை வரவேற்று அறிக்கை வெளியிட்டனர்! ”இது என்னடா வம்பா போச்சே முதல்வராக இருக்கும் தான் வரவேற்பு அறிக்கை வெளியிடாவிட்டால் வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுமே..”என ஸ்டாலினும் வரவேற்பு அறிக்கை தந்துவிட்டார். ஆனால், காங்கிரஸ் தரப்பு சுதாரித்துக் கொண்டது. அது தேசிய கட்சியல்லவா..? ...