கம்யூனிஸத்தை பேசவும், எழுதவும் பலர் உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டாக வாழ்வது மிகக் கஷ்டமாகும்! ஆனால், காந்தி இயல்பிலேயே கம்யூனிஸ குணாம்சங்களோடு இருந்தார்! அந்தப்படியே தான் அவரது போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் ஆகிய ஆஸ்ரம வாழ்க்கையை ஒரு கம்யூனாக கட்டமைத்து, யாவருக்கும் சமமான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார்! இன்னும் எத்தனையெத்தனை விவகாரங்களில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக வெளிப்பட்டார் எனப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வந்துள்ளன. அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம்  என பலவற்றை  தொடர்ந்து ...