ரஜினி எப்பவுமே தன்னை தனிமனிதனாகத் தான் உணர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்கிறார்! பொது மனிதனாக அவர் எப்போதும் தன்னை உணர்ந்தது இல்லை. நாம தான் அவரை இல்லாத உயரத்துல வச்சிருக்கோம்… இப்ப இது சம்பந்தமாக நான் அவர் கிட்ட கேட்கிறேன்னு வச்சுக்கிடுங்க..அவர் பதில் எப்படி தெரியுமா இருக்கும்! ’’என்னப்பா பெரிய தப்பை கண்டுபிடிச்சிட்டீங்க..! ஆறுமாசமா ஒன்னுமே வருமானமில்லாத இடத்துக்கு நீங்க வரியை லட்சக்கணக்குல போடுவீங்க…., நான் ஏன் எதுக்குன்னு கேட்டா, நியாயமில்லைன்னாக்கா அது தப்பா? பணம் என்னா மரத்துலயா காய்ச்சு தொங்குது…? நானே வருஷத்துக்கு ஒரு ...