காங்கிரஸ் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..? 2024 ல் மீண்டும் படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா? எட்டு ஆண்டுகால மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை ...
மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கபிள்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதன் 52 செயற்குழு உறுப்பினர்களுடன் கூடி அனைத்து பிரச்சினைகளையும் மனம் திறந்து விவாதித்துள்ளது! கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கபட்டதோடு, காங்கிரசுக்கு சித்தாந்த பிடிப்புள்ள – போராட குணம் வாய்ந்த – களத்தில் நின்று போராடக் கூடியவர்களே இன்றைய தேவை என்பதை சோனியாவும், ராகுலும் சூசகமாக தெளிவுபடுத்தினர்! காங்கிரஸ் தலைமையை விமர்சித்து பகிரங்கமாக பொதுவெளியில் பேசிய கபிள்சிபிள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைவரும் கூடி விவாதித்தனர்! மன்மோகன்சிங் மருத்துவமனையில் ...