உத்திரப் பிரதேச சம்பவங்கள் மனதை உலுக்கி எடுக்கின்றன! இந்த சம்பவங்களை நாம் வரிசைப்படி வைத்துப் பார்த்தால், நாம் நாகரீகமான சமுதாயத்தில் தான் வாழ்கிறோமா…என வெட்கமாக உள்ளது. உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்திய நாத் முதல்வரானது முதல் வன்முறைகள்,அராஜகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலானவற்றை அரசே பொதுவெளியில் கசியாதவாறு பார்த்துக் கொள்கிறது.அதற்கு பெரும்பாலான ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன! ஆனால்,அதையும் மீறி வரக் கூடிய ஒரு சில செய்திகளே பேரதிர்வைத் தருகின்றன.அதற்கு எதிர்வினையாற்றும் போது ராகுல் காந்தியே தாக்கப்படுகிறார் என்றால்…,இந்த நாட்டில் தவறுகளை  துணிந்து  தட்டிக் ...