மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் செய்த பிரச்சார சுற்றுப்பயணம் அவரைப் பற்றிய கூடுதல் புரிதல்களை நமக்குத் தந்துள்ளது! அவரது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வேகம் இருந்தது! அவரது ஒவ்வொரு சொல்லிலும் உண்மை இருந்தது! அது உதட்டிலிருந்தல்ல, உள்ளத்தில் இருந்து வந்தது என்பதை கேட்பவர்களால் உணர முடிந்தது! எளிமை, சக கட்சிக்காரர்களுடன் இணக்கம்,பேசக்கூடிய விஷயங்களில் அவருக்கு இருந்த தெளிவு,கமிட்மெண்ட்..எல்லாமே..அவர் ஒரு ’’பீப்பிள் பிரண்டிலி லீடர்’’ என்ற உணர்வை தந்து கொண்டே இருந்தது! ஒரு இளம் ஜவஹர்லாலை பார்க்கக் கூடிய உணர்வை தந்தது என்று கூடச் ...