ராகுலும்,பிரியங்காவும் தற்போது மாபெரும் மக்கள்  தலைவர்களாக பரிணாமமடைந்து வருகிறார்கள்! அப்படியான சந்தர்ப்பங்களை உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியநாத் உருவாக்கி வருகிறார்! பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள் ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது! அமெரிக்காவில் நிலவிய வெள்ளையின ஆதிக்கம் ஒரு மார்டின் லூதர்கிங்கை பிரசவித்தது. தென் ஆப்பிரிக்க அரசின் நிறவெறி போக்குகள் நெல்சன்  மண்டேலா உருவாகக்  காரணமாயிருந்தது. அது  போல உத்திரபிரதேச அரசின் உச்சகட்ட மத,சாதி வெறித்தனங்கள்,குற்றவாளிகளின் பாதுகாவர்களாக அரசும்,அரசு நிறுவனங்களும் இயங்கும் அடாவடித்தனம் ஆகியவை. .ராகுலையும் ,பிரியங்காவையும் வேற ஒரு லெவலுக்கு கொண்டு சென்று கொண்டுள்ளன! கொடூர மனம் படைத்தவர்களிடம் அதிகாரம் சென்றால் என்ன நடக்குமோ…அது தான் ...