க. நாகராஜன், அருப்புக் கோட்டை நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே? செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி ...