இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்கு போராடியது ஒரு காலம்.ஆனால்,இன்று ராஜபக்சே அரசாங்கம் நாடாளுமன்றம், அதன் மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டு, நாட்டின் அதிபர் ஒருவருக்கே அனைத்து அதிகாரமும் என்ற வகையில் 20வது சட்டதிருத்தத்தை செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையுமே பறித்து, தன் ஒற்றைக் குடும்ப சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதானது போராட்ட களத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது! இலங்கையில் 20 வது சட்டதிருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் ...