தமிழக அரசியலில் இவருக்கு நிகராக வன்முறை வார்த்தைகளை பிரயோகித்த இன்னொருவரை சொல்ல முடியாது! வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்கள்! இந்துத்துவ இயக்கங்களின் செல்லப்பிள்ளை!  பால் வளத்துறையில் பகல் கொள்ளை நடத்தியவர்! கொலை வழக்கு,சொத்துக் குவிப்பு வழக்கு, வன்முறை தூண்டிய வழக்குகள் என அடுக்கடுக்காய் இருந்தாலும், ”மோடி என் டாடி’’ என்ற ஒற்றை வார்த்தையால், பாதுகாப்பாக வலம் வருபவர். இவரது விசித்திர அரசியல் வில்லங்கங்கள் வெகு சுவாரசியமானது…! வன்மத்தை விதக்கும் ராஜேந்திர பாலாஜி வெல்வாரா..? அனல் கக்கும் பேச்சுக்கள், ஆங்கார முகபாவம், ...