வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம் நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா? அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர். மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் ...

மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ”எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்” என்கிறார் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்! திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..! இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்! எம்.ஜி.ஆர் எந்த மாதிரியான ஆட்சியை தந்தார் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளேன். இதை நமது இளம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, மக்களுமே கூட குறித்து வைத்துக் கொண்டு ஆக, ‘’இப்படிப்பட்ட படுமோசமான ஆட்சியைத் ...

கமலஹாசனின் சூட்சும அரசியல், நுட்பமான காய் நகர்த்தல்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது! மதுரையில் இன்று தேர்தல்பிரச்சாரத்தை துவங்கிய கமலஹாசனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்! கேள்வி; ஆன்மீக அரசியலும் மக்கள் நீதி மையமும் ஒன்றிணையுமா? கமல்; கட்சிகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளது, அணி கூடவும் வாய்ப்புள்ளது! இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும். இந்த பதிலில் என்ன புரிந்து கொள்வது? இன்னொருபக்கம் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன் என காலந்தாழ்ந்து அறிவித்த நிலையிலும் கூட, அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்யாமல் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளார் ரஜினி! அதனால், ...

தமிழக அரசியல் சூழல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலே தற்போது மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. # பாஜக ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகள்! # பாஜகவால் இயக்கப்படும் சிறுகட்சிகள்! # பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்! இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை  பாஜகவே வழி நடத்துகிறது! தன்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத வேறுபட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிகளை எப்படியாவது வளைத்துப் போட்டு அவர்களின் லகானை தன் கையில் வைத்து இயக்குகிறது. மூன்றாவதாக தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பதறியும்,கதறியும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை தன்னை ...