உலகத்தில் எங்குமே நடக்காத அதிசயங்கள் அரங்கேறும் இடம் தமிழ் நாடாகத் தான் இருக்கும்! அரசியலில் ஈடுபட விருப்பம் காட்டாத ஒரு நடிகரை நம்பி, இந்தியாவை ஆளும் ஒரு கட்சி இடைவிடாமல் பகிரத பிரயத்தனங்களைச் செய்த வண்ணம் உள்ளது! ‘அரசியலுக்கு வரமுடியாது’ என்பதை துணிந்து சொல்ல முடியாமல், பல காலம் தவித்து வந்த ரஜினிக்கு கடைசியில் கொரானா கை கொடுத்தது! ஆனால், அவரை நம்பி பல வருடங்களாக களவேலை பார்த்து, பல தரப்பிலும் பழைய அரசியல் வி.ஐ.பிக்களை தயார்படுத்தி வைத்து, பல கனவுகளோடு இருந்த பாஜக ...