தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்! இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்!  அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது ...

இந்தியாவில் இதழியல் துறையின் இழி நிலைக்கு ’தி இந்து தமிழ் திசை’ ரஜினிகாந்திற்கு சிறப்பு புத்தகம் வெளியிட்டுள்ள நிகழ்வே சாட்சி! மலிவான ரசனை போக்குகளை மகத்தானதாக பூதாகரப்படுத்தி, பிரமிப்பூட்டி, கல்லா நிரப்ப வேண்டிய கட்டாயம் என்ன வந்தது ஒரு பாரம்பரிய பத்திரிகை குழுமத்திற்கு…? இன்றைக்கு நாடும், மக்களும் எவ்வளவோ சிக்கலான விஷயங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளும்,தொழிலாளர்களும் சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திராத சோதனைகளை சந்தித்து எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியுள்ளது..! மனித உரிமை ஆர்வலர்கள் வேட்டையாடப்படுகின்றனர். கொரானா ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவிலிருந்து பல குடும்பங்கள் ...

இது ரஜினி பிறந்த நாளுக்கான சிறப்பு பதிவல்ல! யதேச்சையாக அந்தி மழை இதழின் யூடியுப் சேனலுக்காக தம்பி, பத்திரிகையாளர் தமிழ் கனல் என்னை நேர்காணல் செய்தார். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வெளிப்பட்டவிதம்,பிறகு அவருக்கு ஒரு சூப்பர்ஸ்டார் இமேஜ் கட்டமைக்கப்பட்ட போது எப்படி அவரது அணுகுமுறைகள் மாற்றம் கண்டண என கூறியுள்ளேன். அரசியல், ஆன்மீகம் குறித்த அவரது புரிதல்கள், அவரது இயல்பு…ஆகியவற்றை குறித்த என் மதிப்பீடுகளை இதில் பகிர்ந்துள்ளேன்! ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்,மாயைகள் எப்போது எந்த காலகட்டத்தில் இருந்து தொடங்கி, பிழைப்புவாத இதழியல் துறையின் ...

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள் அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள் ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிற பிரபல நடிகர்களான கமல்,ரஜினி,விஜய்யின் அப்பா உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் வரலாறு காணாத அளவில் பணம் கரை புரண்டோடிய தேர்தலாக உள்ளது! இத்தனைக்கும் வெறும் 1,303 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஒரு சங்கம் தான் இது! இதில் தலைவருக்கு போட்டியிட்ட இரு அணிகள் அள்ளிவிட்ட பணம் அசாதரணமானது. முரளி ராமநாதன் அணி ஒரு பிரிவாகவும் டி.ராஜேந்தர் அணி ஒரு பிரிவாகவும் இதில் ...