இரா.அன்பழகன், திருப்பரங்குன்றம், மதுரை அதிமுகவில் பிளவு ஏற்படுமா? பிளவு ஏற்பட்டால் யார் கை ஓங்கும்? கட்சி நடத்திச் செல்லும் அளவுக்கு கமிட்மெண்ட் உள்ளவரல்ல ஒபி.எஸ். தொண்டர்கள் ஆதரவுமில்லாதவர். சசிகலாவை நம்பி சென்றால் காலப்போக்கில் காணாமலாக்கிவிடுவார்கள்! கமிட்மெண்ட்டானவர் என்றாலும் தலைவனுக்கான பண்பில்லாதவர் இபிஎஸ்! சசிகலாவும், தினகரனும் தங்கள் சமுதாயம் அளவுக்கு மட்டுமே செல்வாக்குள்ளவர்கள்! ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் சூட்சும அரசியலில் யார் தப்ப முடியும் எனத் தெரியவில்லை! பிளவு தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. பிளவுக்குப் பின் அந்தக் கட்சி நீண்ட நாட்களுக்கு பிழைத்திருக்காது. எஸ்.ராதாகிருஷ்ணன், தேன்கனிக் கோட்டை, ...

ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்! அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்! இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் ...

‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு என் கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி ...

ரஜினி ஆஸ்பீடலைஸ்டு ஆனதற்கு அவரை அரசியலுக்கு வருமாறு நிர்பந்தித்து வருவது தான் காரணமாக இருக்கலாம் என நான் யூகிக்கிறேன்! டிசம்பர் 31 நெருங்க, நெருங்க அவரை பதற்றம் தொற்றத் தொடங்கி, அது அவரை மன உலைச்சல், ரத்த அழுத்தம் ஆகியவற்றில் தள்ளிவிட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்! கொரானா காலகட்டம் முழுவதும் தன்னை தனிமைப்படுத்தி தற்காத்துக் கொண்டவர் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார் என்றால், அது சினிமா மீது அவருக்கு இருக்கும் அளவற்ற பற்றைத் தான் உணர்த்துகிறது! ஏனெனில், அவர் சினிமா ஒன்றைத் தான் உயிர்மூச்சாக ...

பேசுவது ஆன்மீகம், செய்வதெல்லாம் பித்தலாட்டம் என்பதற்கான ஒரு சம்பவமே இது! ஆரம்பகாலத்தில் துக்ளக்கில் ஆடிட்டர் குருமூர்த்தி தன் மனைவியை ஒரு பங்குதாராக ஆக்கியிருந்தார். அதனால்,அவர் கணக்கு,வழக்குகள் பார்ப்பதற்கென்று ஒரு அக்கவுண்ட் மேனேஜரை சோவுக்கு பரிந்துரைத்தார். அவர் பெயர் சீனிவாசன்.,குள்ளமாக இருப்பார். துக்ளக் அலுவலகத்தில் அவருக்கென்று ஒரு தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது! துக்ளக் இதழ் விற்பனை,விளம்பர வருவாய் அனைத்தையும் அவர் தான் கவனித்தார்.அப்போது துக்ளக் அலுவலகம் மயிலாப்பூர் சிஐடி நகரில் இருந்தது. அவர் சர்வ அதிகாரங்களுடன் சுதந்திரமாக செயல்பட்டார்.அவரை சந்திக்க ஆர்.எஸ்.எஸ் ஆட்களெல்லாம் அலுவலகத்திற்கு வருவார்கள். ...

பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அரசியல் தொடர்பில் முற்றிலும் அலட்சியப்படுத்த வேண்டிய ஒரு மனிதன் இந்த உலகில் ஒருவர் உண்டென்றால், அது ரஜினிகாந்த் தான். சுயம் உணராத சூனியம் அவர்! சுயநலமே உருவான தற்குறி அவர்! அவரது வெற்றியும்,தோல்வியும் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது தான்! தன்னை எப்படி வேண்டுமானாலும் தங்கள் நலன்களுக்காக பேச வைக்க முடியும்,இயங்க வைக்க முடியும் என ஆதிக்க வர்க்கத்திற்கு அனுசரணையாளராக இருப்பது தன்னுடைய சாமார்த்தியம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ’அது சாமார்த்தியமல்ல, சகிக்கமுடியாத அநீதி’ என ...

உலகில் முப்பது ஆண்டுகளாக முடியாத ஒன்றை, முடித்துக் காட்டிவிடுவதாக நம்ப வைத்து மக்களை முட்டாளாக வைத்திருந்த ஒரு நபரும்,அப்படி ஏமாந்த ஒரு தேசமும் தமிழகமாகத் தான் இருக்க முடியும்! இந்த விவகாரத்தில் மக்களை மட்டுமல்ல தன்னைத் தானே ரஜினி ஏமாற்றிக் கொண்டார் என்றும் நான் சொல்வேன்! தான் ஓடமுடியாத மண்குதிரை என்று அவருக்கே நன்றாக தெரியும்! ஆனால்,என் முதுகில் தமிழகத்தையே சுமந்து கரைசேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையை  மறை முகமாகத் திரைப்படங்களிலும், நேரடியாக ஊடகங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டமைத்து அதைக் கலைந்து விடாமல் காப்பாற்றியும் வந்தார். ஒரு வகையில் ...

ரஜினி எப்பவுமே தன்னை தனிமனிதனாகத் தான் உணர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்கிறார்! பொது மனிதனாக அவர் எப்போதும் தன்னை உணர்ந்தது இல்லை. நாம தான் அவரை இல்லாத உயரத்துல வச்சிருக்கோம்… இப்ப இது சம்பந்தமாக நான் அவர் கிட்ட கேட்கிறேன்னு வச்சுக்கிடுங்க..அவர் பதில் எப்படி தெரியுமா இருக்கும்! ’’என்னப்பா பெரிய தப்பை கண்டுபிடிச்சிட்டீங்க..! ஆறுமாசமா ஒன்னுமே வருமானமில்லாத இடத்துக்கு நீங்க வரியை லட்சக்கணக்குல போடுவீங்க…., நான் ஏன் எதுக்குன்னு கேட்டா, நியாயமில்லைன்னாக்கா அது தப்பா? பணம் என்னா மரத்துலயா காய்ச்சு தொங்குது…? நானே வருஷத்துக்கு ஒரு ...