தனக்கு முடிவெடுக்க அதிகாரமற்ற ஒரு விவகாரத்தில் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வருஷக்கணக்கில் கமுக்கமாக இருந்த கவர்னரின் பெருந்தன்மையை என்னென்பது? அவருக்கு அதிகாரம் இருக்கிறதா எனத் தெளிவு பெறாமலே அவரிடம் ஒரு மனுவைத் தந்து வருடக்கணக்கில் காவடிதூக்கி, கை கூப்பிய ஆட்சியாளர்களின் ஆண்மையை என்னென்பது? முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத கவர்னர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு உத்திரவாதம் வழங்கிய மத்திய அரசின் சொலிடர் ஜெனரலின் சட்ட அறிவை என்னென்பது? முடிவெடுக்க அதிகாரமில்லாத கவர்னருக்கு ஒரு வாரக் கெடு கொடுத்து, ”ஐயா உடனடியாக முடிவெடுத்து ...