தொல்லியல் துறை என்றாலே பாஜகவினர் ஏனோ அலறுகின்றனர்! அவர்களை பொறுத்த அளவில் வரலாறு என்பது கற்பனையும், மாயைகளும் கொண்டு கட்டி எழுப்பப்படுவது! அதற்கு பெரும் இடையூறாக தொல்லியல்துறை இருப்பதாக கருதுகிறார்கள்! அதனால் தான், இந்தியாவில் இருக்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டு கிளையை காலாவதி ஆக்கிவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். இதை எதிர்த்து தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வரலாற்று அறிஞர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஆனால், தொல்லியல் துறை மூலமாக கல்வெட்டுகள், புராதனப் பொருட்கள் இல்லாமல் வரலாறு என்பதே உருவாகி இருக்க வாய்ப்பில்லை. ஆதாயங்களை கருதி ...

இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் பேசுவதும், எழுதுவதும் சலிப்பாக உள்ளது! வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன..? சின்மயிக்கு ஏதாவது உள் நோக்கங்கள் உள்ளனவா? தனிமனித பலவீனங்களை சமூக அங்கீகாரத்திற்கு தடையாக்கலாமா..? ஒரு படைப்பாளியையும், அவன் படைப்புகளையும் பிரித்து பார்க்க வேண்டுமா..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விவகாரம்..! பல்வேறு குழப்பங்கள், குதர்க்கங்கள் நிறைந்த இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு பிறக்க இந்த கட்டுரை உதவலாம் என நினைக்கிறேன். முதலாவதாக இந்த விவகாரத்தை சாதிப் பற்று, மொழிப்பற்று, கட்டமைக்கப்பட்ட இமேஜ் ...

கமலஹாசனின் உண்மையான பலம் தெரிந்துவிட்டது. அவரைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் டெபாசிட் பறி கொடுத்துள்ளனர்! நிற்க முடிந்த தொகுதிகளே 141 தான்! அதிலும் பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்கள் கிடைக்காமல் வெளியூர் ஆட்களே நின்றனர். அந்தளவுக்கு தான் கட்சியின் கட்டுமான பலம் இருந்தது. மீதியுள்ள தொகுதிகளை கல்வி சுரண்டலுக்கு பேர் போன எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் பச்சைமுத்து மகனுக்கும், சாதி சந்தர்ப்பவாத அரசியல்வாதியான சரத்குமாருக்கும், போக்கிடம் தெரியாமல் புலம்பிக் கிடந்த கே.எம்.செரிப்பிற்கும் தந்தார். ஏழு தொகுதிகளுக்கு நிற்க ஆளே கிடைக்கவில்லை! இப்படிப்பட்ட ...