”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ...
தன் முனைப்பு, செயலூக்கமுள்ள தன் இயல்பால் போக்குவரத்து ஒழுங்கு, பின்பு அரசு அதிகாரிகள், காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக குரல் எழுப்பி, பிரச்சனைக்கு சட்ட வழியில் தீர்வை தேட நீதிமன்றத்தில் வழக்காடியாகவும், பெற்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தடையாகவும், தாமதப்படுத்தியும், அதிகார ஆளும் தரப்புக்கு சாதகமாக இழுத்தடிப்பு செய்தும் வந்த அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் போராடி அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, சென்னை மக்கள் மத்தியில் சமூக சேவகர் ட்ராஃபிக் ராமசாமியாக அறியப்பட்டு, ஸ்மார்ட் போன் காலத்திற்குப் பின்பு ...