மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன! நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன! ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது ...