‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்; பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ...