தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே மே 7 ஆம் தேதி புதுவை முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரங்கசாமி! ஆனால், துணை முதல்வர் உட்பட நான்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அழுத்தம் தந்தததால் அமைதியாக இருந்த ரங்கசாமி 9 ந் தேதி கொரானாவை காரணமாக்கி, சென்னை வந்து பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு புதுச்சேரி திரும்பிவிட்டார்! அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மாநில எல்லையில் ஆரவாரமான வரவேற்பு தந்துள்ளனர்! அதை பெற்றுக் கொண்டு நேராக அப்பாசாமி பைத்தியம் கோயிலுக்கு போய் வணங்கியவர் ...