விரக்தியின் உச்ச நிலையில் மக்கள் அதிபர் கோத்தபயவின் வீட்டை சூறையாடியுள்ளனர். நிலைமை கை மீறியதால், ராணுவமே செய்வதறியாது மக்கள் பக்கம் வந்து விட்டது! ரணில் விக்கிரமசிங்கே ராஜுனாமா தீர்வாகுமா? வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இனி, இலங்கையின் எதிர்காலம் என்னாகும்? கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற மக்கள் அதிபர் வீட்டையே சூறையாடி உள்ளனர். ராஜபக்சே சகோதரர்கள் மக்கள் கையில் கிடைத்திருந்தால் கைமா ஆக்கி இருப்பார்கள்! இப்படி ஓடி ஒளிவதற்கு செத்து போயிருக்கலாம்! நிலைமையை சமாளிக்க சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்று உள்ளார். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள ...