எஸ்.வேதவள்ளி, பூந்தமல்லி இடைத் தேர்தலில் கிடைத்த உதையால் பாஜக அரசு பெட்ரோல் வரியை குறைத்துவிட்டு மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் குறைக்க சொல்லி உள்ளதே? ஆனைக்கு விழுந்த அடியை பூனைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்! சரி தான்! இந்த பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தின் பின்னுள்ள உண்மையான திமிங்கலம் ரிலையன்ஸ் தான். இன்றைக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் சரிபாதி உற்பத்தி அம்பானி கைகளில் தான் உள்ளது. அவர் தான் விலையேற்றத்தின் முழு காரணகர்த்தா! அந்த திமிங்கலத்திற்கு மக்களையே தீனியாக்கி ஆள்பவர்கள் தான் மத்திய ஆட்சியாளர்கள்! க.முருகானந்தம், காஞ்சீபுரம் ...