தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன! தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ? எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ...
“சிவபுரம் சிவாயசி”என்கிற சிவனடியார்கள் அமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் சமீபத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவ தார்ணா மலர்மகள் பேட்டியின்போது கூறியது: “இந்தியாவில் , அகதி முகாம்களில் 65 ஆயிரம் ஈழத்தமிழர்களும் முகாமுக்கு வெளியே சுமார் 35 ஆயிரம் ஈழத்தமிழர்களும் வசிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு உதவிகள் சலுகைகளை அரசு வழங்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரு வலி நிறைந்த வாழ்க்கை சூழலிலேயே இவர்கள் வாழ்கிறார்கள் ! அகதி முகாம்களில் பிறந்து வாழ்ந்த ஒரே காரணத்திற்காக மிகச் சிறந்த மாணவ மாணவியர் எத்தனையோ ...
பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..! ” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து மரத்தின் கீழ்தான் ...