விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..! ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்க…அப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..? ஒன்னும் பெரிசா நடந்திடலை..! விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்! ’’அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்! விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன? ”எனக்கு ஒன்னுன்னா அரசாங்கம் துணையிருக்கு’’ என்ற ஒரு நம்பிக்கை ...