நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜகவிடையே இணக்கம் உருவாகவில்லை. ”பாஜக அதிகம் எதிர்பார்க்கிறது” என அதிமுகவும், ”அலட்சியப் படுத்தினால் அனுபவிக்க வேண்டும் தயாரா..?” என பாஜகவும் சொல்கின்றன! என்ன நடக்கிறது? நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக அதிமுக, பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தும் நல்ல முடிவுக்கு வர முடியவில்லை. பாஜகவை பொறுத்த வரை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். கட்சியில் வசதி படைத்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் உள்ளூர் ...
ஸ்டாலினின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மை என்ன..? பிரதமருடனான சந்திப்பால் தமிழ் நாட்டிற்கு பிரயோஜனமுள்ளதா.? என்றால், ஸ்டாலின் தந்துள்ள 25 கோரிக்கைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவை தற்போதைய ஒன்றிய அரசின் கொள்கைக்கு நேர் எதிரானவை! எதிர்கால கலக அரசியலுக்கான ஒரு கிளியரான மெசேஜ் இந்த கழக ஆட்சி வைத்துள்ள கோரிக்கைகளில் புதைந்துள்ளன..! ”பிரதமர் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்தார். எதை வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாகக் கேளுங்கள்’’ என்றார் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு தானே ஏற்று நடத்தக் ...
மத்திய – மாநில அரசுக்கிடையிலான அதிகார பகிர்வு, கடைபிடிக்க வேண்டிய உறவுகள்.. ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துள்ளது! ”பரஸ்பர மரியாதையா..? ஆண்டான் – அடிமை உறவா..?” – இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.! ‘’பேசுவதற்கு வாய்ப்பில்லை’’, ‘’அமைச்சருக்கு அழைப்பில்லை, அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிக்கு தான் அழைப்பு’’ ஐந்து நிமிஷம் பேசத் தான் அனுமதி மாநிலஅரசு அதிகாரிகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பந்தாடுவேன். என்ற ஆதிக்க மன நிலையில் இனி மத்திய அரசாங்கம் செயல்படுவது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! ‘’மாநில அரசுகள் ...