பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒரு காரியத்தை கண்ணும்,கருத்துமாகச் செய்கிறது எனில்,அது அரசுத் துறை நிறுவனங்களை அழித்து அம்பானியை வாழ வைப்பதாகும்! இதை ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் என நான் எழுதவில்லை!அம்பானிக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாக பாஜக அரசு கருதி,தொண்டுழியம் செய்வதற்கும் மேலாக அம்பானிக்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனையாகும்! கொரானா காலத்திலும் கூட – 140 கோடி மக்கள் ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையிலும் கூட – அம்பானி மட்டுமே அபார லாபம் ...