சித்த மூலிகைகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி நிருபணம் செய்யும் ஆய்வு நோக்கத்திற்கு தொடர்ந்து தடைகள்! ஆயிரக்கணக்கான கோடிகளை ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு ஒதுக்குகின்ற மத்திய ஆட்சியாளர்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்றால், நிதி ஒதுக்க மறுத்து சிடுசிடுக்கிறார்கள்! ஆயுர்வேத மருத்துவ துறை வளர்த்தெடுக்கப்பட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது ஒன்றிய அரசு! இதனுடன் முகலாய பாரம்பரியம் கொண்ட யுனானி மருத்துவம் கூட வட இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது! ஆனால், சித்த மருத்துவம் மட்டும் தொடர்ந்து நூறு சதம் புறக்கணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. மற்றவை ...
வைரஸினை நம் வாழ்வில் இனி முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை குறைக்கலாம்! கொரோனா வைரஸ் இனி வெவ்வேறு வடிவங்களில் நம்மோடு வாழவுள்ளது! அதன் நகர்வுகளை, இயல்புகளை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அதன் கடந்த காலத் தன்மைகள், நிகழ்கால உருமாற்றங்களை அவதானித்து நாம் எப்படி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்..! 1980களில் ஒரு பிரித்தானிய வைத்தியசாலையில், மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை ஏற்றினர். அக்காலத்தில் கோவிட்- 19 உருவாகவில்லை. அந்த மருத்துவ ஆய்வின் கருப்பொருள், கோவிட்-19 இன் குடும்பத்தைச் ...
கல்விப் பின்புலமோ, சமூக பின்புலமோ,பொருளாதார பின்புலமோ இல்லாமல் ஒரு எளிய மனிதானாலும் கூட மிகப் பெரிய ஆய்வு நூல்களை படைத்தளிக்க முடியும் என்பதற்கு பெ.சு.மணி என்கிற பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி ஒரு எடுத்துக்காட்டாகும்! அவர் ஒரு சுயம்பு! தன்னுடைய இடையறாத ஆய்வின் மூலம் தமிழ் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியவர்களில் பெ.சு.மணி குறிப்பிடத் தக்கவர்! தான் வாழும் சமூகத்திற்கு தேவையான ஆய்வுகளை தானே முன்னெடுத்து பிரமிக்கதக்க ஆய்வு நூல்களை தமிழ்ச் சமூகத்திற்கு தந்துள்ளார் பெ.சு.மணி! அந்த நாட்களில் நான் துக்ளக்கில் சில பழைய சுதந்திர போராட்டகால ...