2015-ல் பெய்த மழையில் நான்கு மாவட்டங்களில் –சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் கடலூர் போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளச் சேதங்கள்- உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டன. டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடியிலும் பெரும் மழைச்சேதங்கள். இந்த நிகழ்வுகளின் மூலம் அன்றைய அரசாங்கத்தின் -அரசியல்வாதிகளின் – ஏன் தனிப்பட்டவர்களின் தவறுகள் மற்றும் குற்றங்கள் பல வெளியே அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. தற்போதைய பெருவெள்ளம் அவற்றை நினைவுபடுத்துகிறது. அன்றைய பேரழிவுகளில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போதுமான பாடம் பெறவில்லை. இப்போதும் ஏன் தண்ணீர் சாலைகளில் இவ்வளவு ...