இந்த தீர்மானத்தையும் கவர்னர் கிடப்பில் போடலாம். சட்ட மன்றத்திற்குள் நீட் எதிர்ப்புக்கு நின்ற அதிமுக நாளை பாஜக நிர்பந்தத்தால் காலை வாரலாம்! ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? ஒரு விஷயம் தெளிவாகச் சொல்ல முடியும், தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் நீட் எதிர்ப்பில் ஒருமித்த கருத்தில் உள்ளன! ஆக, நீட் வேண்டுமா? வேண்டாமா? என்ற தடுமாற்றம் தமிழகத்தில் பெரும்பான்மையோருக்கு இல்லை எனலாம்! ஆனால், நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு மட்டும் இந்தியாவில் தனிமைப்பட்டு நிற்கிறது என்பது உள்ளபடியே நமக்கு பின்னடைவு தான்! நீட்டை ...